CRIME
அய்யோ கடவுளே..! “அவள கொன்னுட்டேன்.. நானும் போறேன்..” உறவினரிடம் கூறிவிட்டு லாரி முன் பாய்ந்த காதலன்..! நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் காதலியைக் கொலை செய்துவிட்டு, காதலன் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி காணாமல் போன 17 வயது சிறுமியின் உடலை, 7 நாட்களுக்குப் பிறகு மலாவர் அடர்ந்த வனப்பகுதியில் காவல்துறையினர் மிகவும் சிதைந்த நிலையில் கண்டெடுத்துள்ளனர். 21 வயதான அனுராக் என்ற இளைஞன், தனது சிறுமி காதலியை அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போனதால், அவரது குடும்பத்தினர் ராஜ்கர் கொத்வாலி காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்தனர். அத்துடன் அதே ஊரைச் சேர்ந்த அனுராக் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் அன்றைய தினமே, பகாரி பங்களா அருகே நடந்த சாலை விபத்தில் லாரி மோதி அனுராக் உயிரிழந்ததாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. தொடக்கத்தில் இது வெறும் விபத்து என நினைக்கப்பட்ட நிலையில், அனுராக்கின் செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் டவர் லொகேஷனை ஆய்வு செய்தபோது, அவரது கடைசி இருப்பிடம் மலாவர் வனப்பகுதி எனக் காட்டியது.
இதையடுத்து வனப்பகுதிக்குள் சென்று சோதனையிட்ட காவல்துறையினர், புதர்களுக்கு இடையே அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றினர். சம்பவ இடத்தில் ஒரு அறுக்கும் வாள் மற்றும் மரத்தில் தூக்குக் கயிறும் கண்டெடுக்கப்பட்டன. மேலும், அனுராக்கின் உறவினர் ஒருவரிடம் நடத்திய விசாரணையில், “நான் சிறுமியைக் கொன்றுவிட்டேன், நானும் போகிறேன்” என்று அனுராக் கூறிவிட்டுச் சென்றதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. காதலியை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, உடனடியாகச் சென்று லாரி முன் பாய்ந்து அனுராக் தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
