CRIME
பகீர்..! நள்ளிரவில் கேட்ட அந்த சத்தம்… வராண்டாவில் உக்காந்திருந்த பெண்ணை சுட்டு தள்ளிய மர்ம நபர்கள்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!”
பீகார் மாநிலம் சாரண் மாவட்டம் தரையா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சனிக்கிழமை இரவு வீட்டின் வரண்டா பகுதியில் அமர்ந்திருந்த 55 வயதான நீலம் தேவி என்ற பெண்ணை, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். உயிரிழந்த பெண் தரையா கிராமத்தைச் சேர்ந்த மறைந்த அவதேஷ் சிங்கின் மனைவி ஆவார். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் குடும்பத்தினரும் ஓடிவந்து பார்த்தபோது, அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
உடனடியாக மீட்கப்பட்ட நீலம் தேவி, முதலுதவிக்காக தரையா பரிந்துரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், சப்ரா சதர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாட்னாவிற்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், பாட்னாவிற்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும், அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்த தரையா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார் மற்றும் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் தெரியவில்லை. நீலம் தேவியின் குடும்பத்தினர் தரையாவின் ராம்பாக் பகுதியில் ஹோட்டல் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணை நிறைவடைந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்றும் காவல் நிலைய அதிகாரி சத்யம் பிரதாப் தெரிவித்துள்ளார்.
