CRIME
“என் துணியவே அவ போட்டிருக்கா..?!” தாய் வீட்டிற்குச் சென்ற 1 மாதத்தில் கணவன் செய்த விபரீத காரியம்.. முதல் மனைவிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. பரபரப்பு பின்னணி..!!
திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகத் தனது தாய் வீட்டிற்குச் சென்ற பெண்மணிக்கு நேர்ந்த அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்தப் பெண் தாய் வீட்டிற்குச் சென்று ஒரு மாதம் கடந்தும் கணவன் அவரைத் திரும்ப அழைத்துச் செல்ல வரவில்லை. இதற்கிடையில், அந்த நபர் வேறொரு பெண்ணைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்து மனைவியாக வாழத் தொடங்கியுள்ளார். இந்தத் தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த முதல் மனைவி உடனடியாகத் தனது கணவர் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளார். அங்கு வந்தவருக்கு, அந்தப் புதுப்பெண் தனது ஆடைகளை அணிந்திருப்பதையும், தனது பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்துவதையும் கண்டு அதிர்ச்சி இரட்டிப்பானது. தனது கணவன் அந்தப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை உணர்ந்த அவர், ஆத்திரத்தில் வீட்டில் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும், தான் இரண்டாவது திருமணம் செய்தது உண்மை என்பதால் அந்த நபர் எவ்விதப் பதிலும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.
ஏற்கனவே திருமணமான ஒரு நபர், முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது சட்டப்பூர்வமாக மற்றொருவரைத் திருமணம் செய்ய முடியாது. இந்தியச் சட்டப்படி முதல் திருமண பந்தம் முறியாத நிலையில் செய்யப்படும் இரண்டாவது திருமணம் செல்லாது என்பதோடு, அது தண்டனைக்குரிய குற்றமாகும் இந்தச் சம்பவத்தில் முழுமுதற் தவறு அந்த கணவனுடையதே ஆகும். ஒரு குடும்ப அமைப்பையும், உறவுகளின் புனிதத்தையும் சீர்குலைக்கும் இத்தகைய செயல்கள் சமூகத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்று நெட்டிசன்கள் பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். முதல் மனைவியைப் பிரித்து வைத்துவிட்டு, அவரது உடமைகளையே மாற்றுப் பெண்ணுக்குக் கொடுத்து வாழ நினைத்த கணவனின் இந்த சுயநலம் மற்றும் ஈகோவே இந்த ஒட்டுமொத்தப் பிரச்சினைக்கும் முக்கியக் காரணமாகும்.
