“ஐயோ கடவுளே.. அலறிய சமையலறை.. ரத்த வெள்ளத்தில் சரிந்த 30 வயது பெண்.. கணவனின் வெறிச்செயல்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை….!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ கடவுளே.. அலறிய சமையலறை.. ரத்த வெள்ளத்தில் சரிந்த 30 வயது பெண்.. கணவனின் வெறிச்செயல்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை….!!

Published

on

கேரளா மாநிலம் வர்க்கலா அருகே உள்ள செம்மருதி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக சுபினா (30) என்ற இளம் பெண் அவரது கணவரால் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் சுபினாவுக்கும் அவரது கணவர் ஷாஜன் (39) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஷாஜன் சமையலறை கத்தியை எடுத்து சுபினாவின் கழுத்தில் ஆழமாகக் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சுபினா வீட்டின் உள்ளேயே சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக அவர் வர்க்கலா தாலுகா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தத் தம்பதியருக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சுபினாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபரீதக் கொலை தொடர்பாக ஆயிரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணவர் ஷாஜனைக் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாஜன் தொடர்ந்து தன்னைத் துன்புறுத்தி வருவதாகக் கூறி, சுபினா ஏற்கனவே பலமுறை ஆயிரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பழைய புகார்களின் பின்னணி மற்றும் தம்பதியருக்கு இடையே நீடித்து வந்த பிற பிரச்சினைகள் குறித்து அண்டை வீட்டார மற்றும் உறவினர்களிடம் போலீசார் தங்களின் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in