LATEST NEWS
“துரோகத்தின் உச்சம்.. கள்ளக்காதலிக்காக கணவன் செய்த காரியம்…” நடுரோட்டில் விளக்குமாறு பூசை நடத்திய மனைவி.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
மனைவி வீட்டில் இருக்கும்போதே மற்றொரு பெண்ணுடன் தவறான உறவில் இருந்த கணவனை, அவரது மனைவி நடுரோட்டிலேயே விளக்குமாற்றால் அடித்து வெளுத்த பரப்பரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது கணவன் வேறொரு பெண்ணுடன் பழகி வருவதை அறிந்த மனைவி, அவரைப் பொதுவெளியில் வைத்துத் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மனைவி தனது கையில் இருந்த விளக்குமாற்றை எடுத்து கணவனை நடுரோட்டிலேயே சரமாரியாக அடிக்கத் தொடங்கினார். இச்சம்பவத்தை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்துள்ளனர்.
அந்தப் பெண் தனது கணவரை அடிக்கும் போது, “எங்கள் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரையே திருடிக்கொண்டு போய், அந்தப் பெண்ணின் வீட்டில் கொடுத்துவிட்டான்” என்று ஆவேசமாகக் கத்தியுள்ளார். சொந்த வீட்டில் சமைக்க வேண்டிய சிலிண்டரைக் கூட கணவன் திருடிச் சென்று கள்ளக்காதலிக்குக் கொடுத்ததுதான் அந்த மனைவியின் எல்லையற்ற கோபத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்த வினோதமான மற்றும் பரபரப்பான அடிதடிச் சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது
