“அடக்கொடுமையே.. 10 வயது இளைய மருமகனுடன் ஓட்டம் பிடித்த அத்தை..” போலீஸை பார்த்ததும் விபரீத முடிவு.. ஹோட்டலில் அரங்கேறிய நடுக்கமடைய வைக்கும் க்ளைமாக்ஸ்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக்கொடுமையே.. 10 வயது இளைய மருமகனுடன் ஓட்டம் பிடித்த அத்தை..” போலீஸை பார்த்ததும் விபரீத முடிவு.. ஹோட்டலில் அரங்கேறிய நடுக்கமடைய வைக்கும் க்ளைமாக்ஸ்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் சொந்த அத்தையை மருமகனே காதல் வலையில் வீழ்த்தி, அவருடன் ஓடிப்போன அதிர்ச்சியூட்டும் கள்ளக்காதல் விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தையை விட மருமகன் 10 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சில நாட்கள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர். இதற்கிடையில், பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரும் ஒரு ஹோட்டலில் மறைந்திருக்கும் ரகசியத் தகவல் கிடைத்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

ஆனால், போலீசாரைக் கண்டதும் சமூகப் பழிச்சொல்லுக்கும் அவமானத்திற்கும் பயந்த அத்தையும் மருமகனும், அதற்குள்ளாகவே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்ட போலீசார், உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உறவுமுறைகளின் எல்லைகள் சிதைந்து, நாளுக்கு நாள் இதுபோன்ற விபரீதக் காதல் சம்பவங்கள் அதிகரிப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in