“நெஞ்சை உருக்கும் நிஜக் காதல்..” முடங்கிப்போன கணவனை முதுகில் சுமந்து வந்த 60 வயது ‘தேவதை’.. கலெக்டர் ஆபீஸையே கண்ணீர் கடலாக்கிய மூதாட்டி.. வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நெஞ்சை உருக்கும் நிஜக் காதல்..” முடங்கிப்போன கணவனை முதுகில் சுமந்து வந்த 60 வயது ‘தேவதை’.. கலெக்டர் ஆபீஸையே கண்ணீர் கடலாக்கிய மூதாட்டி.. வைரல் வீடியோ..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் பர்ஹான்பூரில், முடக்குவாதத்தால் கால்களை இழந்த தனது கணவரை 60 வயது முதிய பெண்மணி ஒருவர் தனது முதுகில் சுமந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரது கண்களையும் குளமாக்கியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பக்கவாதத் தாக்குதலால் அவரது கணவர் தனது இரண்டு கால்களின் செயல்பாட்டையும் இழந்தார். அன்றிலிருந்து இன்று வரை, பல வருடங்களாகத் தனது கணவரைத் தன் முதுகிலேயே சுமந்து அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்று தற்காத்து வரும் இந்தத் தாயின் அன்பு, காதலின் அதிஉன்னத அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

தனது கணவருக்கு ஒரு மின்சார முச்சக்கர வண்டி வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவே அவர் இந்த வயதிலும் கணவரைச் சுமந்து வந்துள்ளார். ஆண்களை விடப் பெண்களுக்கு மனவலிமையும், எதையும் தாங்கும் மன உறுதியும் அதிகம் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் தம்பதியின் நெகிழ்ச்சியான புகைப்படம் மற்றும் செய்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in