CRIME
அய்யோ கொடுமையே…! நள்ளிரவில் மாமனாருடன் வாக்குவாதம்… அடுத்த நாள் காலையில் வெளிவந்த கொடூர உண்மை.. மனைவியை கூட்டிட்டு போக வந்த இடத்துல நேர்ந்த விபரீதம்…!!
ஜார்ட்ஃகண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள சத்தர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பப்னடீஹ் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி புய்யான். இவர் சனிக்கிழமை மாலை, பிக்கி கிராமத்திலுள்ள தனது மாமனார் வீட்டிற்குத் தனது மனைவியை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது, காந்தி புய்யானுக்கும் அவருடைய மாமனார் ஜகதேவ் புய்யானுக்கும் இடையே திடீரெனக் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உருவானது.
இந்த வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த மாமனார் ஜகதேவ் புய்யான், நள்ளிரவில் ஆயுதத்தால் தாக்கி மருமகன் காந்தி புய்யானைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், குற்றத்திற்கான ஆதாரங்களை மறைக்கும் நோக்கத்தில், மருமகனின் உடலை மாமனார் வீட்டின் அருகே இருந்த சோளக் கொல்லை நிலத்தில் வீசி எறிந்துவிட்டுத் தப்பி ஓடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் சோளக் காட்டில் காந்தி புய்யான் பிணமாகக் கிடப்பதைப் பார்த்த கிராம மக்கள், உடனடியாகச் சத்தர்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்திற்குப் பிறகு மாமனார் தலைமறைவாக உள்ளதால், அவர் மீதான சந்தேகம் வலுத்துள்ளது. காவல்துறை வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மாமனாரைத் தீவிரமாகத் தேடி வருவதோடு, கொலையின் பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
