CRIME
கொடூரம்..! ரெண்டு பெரும் செம போதை… நள்ளிரவில் கள்ளக்காதலனைச் சேலையாலேயே கழுத்தை இறுக்கிக் கொன்ற பெண் கைது..!!
கர்நாடக மாநிலம் தாவணகெரே பகுதியில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலனைச் சேலையால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கணவரைப் பிரிந்து வாழும் ஷபீனா (38) என்ற பெண்ணும், மனைவியைப் பிரிந்து வாழும் மஞ்சப்பா (40) என்ற நபரும் கடந்த சில காலமாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவர்கள் இருவரும் அடிக்கடி போதையில் சண்டையிட்டுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சம்பவத்தன்று இரவும் மது அருந்தியபோது இவர்களுக்குள் பலத்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரமடைந்த ஷபீனா, தான் உடுத்தியிருந்த சேலையாலேயே மஞ்சப்பாவின் கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
மறுநாள் காலையில் இந்த விவகாரம் குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஹடதி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மஞ்சப்பாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, ஷபீனாவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
