மாட்டிக்கிட்டாரே மாப்பிள்ளை.. கள்ளக்காதலியுடன் வெளிநாடு செல்ல முயன்ற புனே தொழிலதிபர்.. ஏர்போர்ட்டில் நடந்த ட்விஸ்ட்.. மனைவியை ஏமாற்றிய கணவனுக்கு கிடைத்த பல்ப்..!! – cinefeeds
Connect with us

CRIME

மாட்டிக்கிட்டாரே மாப்பிள்ளை.. கள்ளக்காதலியுடன் வெளிநாடு செல்ல முயன்ற புனே தொழிலதிபர்.. ஏர்போர்ட்டில் நடந்த ட்விஸ்ட்.. மனைவியை ஏமாற்றிய கணவனுக்கு கிடைத்த பல்ப்..!!

Published

on

புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியிடம் மலேசியாவிற்குத் தொழில் விஷயமாகச் செல்வதாகக் கூறிவிட்டு, கள்ளக்காதலியுடன் வெளிநாடு செல்ல மும்பை விமான நிலையம் வந்துள்ளார். ஆனால், அங்கு வந்த அவரது பெண் தோழியின் பாஸ்போர்ட்டைச் சோதித்த அதிகாரிகள், அது ஏற்கனவே தொலைந்துபோனதாகப் புகார் அளிக்கப்பட்ட பாஸ்போர்ட் என்பதைக் கண்டுபிடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர், மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் தனது வெளிநாட்டுப் பயணத்தை உடனடியாக ரத்து செய்தார்.

மனைவியிடம் இருந்து தப்பிக்க நினைத்த அவர், தனது மொபைல் போனை அணைத்துவிட்டு, விமான நிலைய பொதுத் தொலைபேசி மூலம் மனைவியைத் தொடர்புகொண்டு, “பாஸ்போர்ட் பிரச்சினையால் அதிகாரிகள் எனது போனைப் பறிமுதல் செய்துவிட்டனர்” எனப் பொய் கூறியுள்ளார். கணவரின் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் பயந்துபோன மனைவி, அவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனப் போலீசில் புகார் அளித்தார்; விசாரணையில் தொழிலதிபர் தனது தோழியுடன் கள்ளத்தனமாக வெளிநாடு செல்ல முயன்றதும், மனைவியை ஏமாற்றக் கடத்தல் நாடகமாடியதும் போலீசாரிடம் அம்பலமானது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in