CRIME
“இது என்ன கொடுமை..” 10-ம் வகுப்பு மாணவனை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு.. சுடுகாட்டில் 24 வாலிபர் செய்த பகீர் காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவனை விசைத்தறி தொழிலாளி ஒருவர் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நடுக்கமடைய வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. கே.ஆர்.தோப்பூர் அரசுப் பள்ளியில் படித்து வந்த தவுசிக் என்ற மாணவனும், விசைத்தறி தொழிலாளியான சிவராஜ் (24) என்பவனும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை தவுசிக்கை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற சிவராஜ், அவரோடு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து, இரும்பாலைக்குச் சொந்தமான மேட்டுக்காடு பகுதியில் வைத்து அவனைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
மாணவனைத் தீர்த்துக்கட்டிய பயத்தில் அங்கிருந்து தப்பியோடிய சிவராஜ், தாரமங்கலம் அருகே உள்ள பெரியபட்டி சுடுகாட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காணாமல் போன இருவரையும் தேடி வந்த பெற்றோர்கள், அவர்களின் சடலங்களை வெவ்வேறு இடங்களில் கண்டெடுத்துக் கதறி அழுதனர். இவர்கள் இருவரும் செல்போனில் ‘பிரீபயர்’ போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் அடிக்கடி ஈடுபட்டு வந்ததாகக் கூறும் போலீஸார், இந்த கொடூரக் கொலை மதுபோதையால் நடந்ததா அல்லது ஓரினச்சேர்க்கை விவகாரமா என்ற பல கோணங்களில் மகுடஞ்சாவடி மற்றும் தாரமங்கலம் காவல் நிலையங்கள் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
