CRIME
தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி..! பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொலை… மூட்டையாகக் கட்டி பூசாரி வீட்டுத் தண்ணீர்த் தொட்டியில் வீசிய பயங்கரம்..!!
சேலம் அரிசிப்பாளையத்தில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மூட்டையாகக் கட்டி, அங்கிருந்த ஒரு பூசாரி வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் வீசியுள்ளனர். அந்தப் பகுதியிலிருந்து திடீரென கடுமையானத் துர்நாற்றம் வீசியதை அடுத்து, சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் தண்ணீர்த் தொட்டியைச் சோதனையிட்டபோது, அதற்குள் இருந்த பெண்ணின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர். கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு மூட்டையில் அடைக்கப்பட்டிருந்த அந்த உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், கொலை செய்யப்பட்ட பெண் யார்? மற்றும் எதற்காகக் கொலை செய்யப்பட்டார்? என்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
