CRIME
“அய்யோ கொடுமையே..! குழந்தைகளுக்குத் தூக்க மாத்திரை… நள்ளிரவில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி..” கையும் களவுமாகப் பிடித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் சக்தி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பீனா காலனியில், என்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரமாசங்கர் மிஸ்ரா (40) என்ற குடும்பத் தலைவர் கள்ளக்காதல் விவகாரத்தில் அவரது மனைவியாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ரமாசங்கரின் மனைவி பிரியங்கா மிஸ்ரா (37), தனது இரண்டு மகள்களுக்கும் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு, விகாஸ் சவுகான் என்ற கள்ளக்காதலனுடன் வீட்டில் தவறான உறவில் இருந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 22 அன்று நள்ளிரவில் பணி முடிந்து ரமாசங்கர் திடீரென வீட்டிற்கு வந்தபோது, தனது மனைவி கள்ளக்காதலனுடன் அத்துமீறி இருந்ததைக் கண்டும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், தங்களது ரகசியம் அம்பலமானதால் ஆத்திரமடைந்த பிரியங்கா, சமையலறையில் இருந்த பிரஷர் குக்கரை எடுத்து ரமாசங்கரின் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
மாதம் 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் மற்றும் ஒரு கோடி ரூபாய் வங்கிச் சேமிப்புடன் சொகுசாக வாழ்ந்து வந்த பிரியங்கா, இந்தக் கொடூரக் கொலைக்குப் பிறகு சடலத்தை மறைக்கத் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒரு சதித்திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, விகாஸ் சவுகானின் நண்பர்களான அனுராக் சிங் மற்றும் சோனு குப்தா ஆகிய இருவரையும் வரவழைத்து, ரமாசங்கரின் சடலத்தைச் சாலையோரமாக வீசியுள்ளனர். தொடக்கத்தில் இது சாலை விபத்து எனப் போலீஸார் நினைத்தாலும், ரமாசங்கரின் பெற்றோரிடம் நடத்திய விசாரணை மற்றும் பிரியங்காவின் அலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்ததில் கள்ளக்காதல் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தற்பொழுது காவல்துறையினர் பிரியங்கா, அவரது காதலன் விகாஸ் மற்றும் அவனது நண்பர்கள் இருவர் உட்பட மொத்தம் நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
