“அம்மா… அம்மா…” அரசு மருத்துவமனை பெஞ்சில் அழுது துடித்த குழந்தை.. பெற்ற தாயே செய்த கொடூரம்… நெட்டிசன்களை அழவைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா… அம்மா…” அரசு மருத்துவமனை பெஞ்சில் அழுது துடித்த குழந்தை.. பெற்ற தாயே செய்த கொடூரம்… நெட்டிசன்களை அழவைத்த வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்ட அரசு மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில், தனது தாயால் கைவிடப்பட்ட ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் அங்கிருந்த அனைவரின் நெஞ்சங்களையும் உலுக்கியுள்ளது. இரு குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு வந்த தாய், ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு, இந்த பச்சிளம் குழந்தையைக் குளிர்ந்த பெஞ்சில் தனியாக விட்டிட்டுத் தப்பியோடியுள்ளார். அன்று காலை முதலே பசி மற்றும் தாகத்தால் துடித்த அந்தக் குழந்தை, கண்ணீருடன் “அம்மா… அம்மா…” என்று மட்டுமே அழுதுகொண்டிருந்தது.

https://twitter.com/VibhaRajBhar/status/2093626440780747020/video/1

Advertisement

அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அழுகையைத் தாங்க முடியாத மருத்துவமனை நர்ஸ் மற்றும் ஊழியர்கள், குழந்தைக்குப் பால் மற்றும் பிஸ்கட் கொடுத்து, புதிய ஆடைகளை அணிவித்து, அன்போடு அரவணைத்து அமைதிப்படுத்த முயன்றனர். இருப்பினும், தாயின் மடிக்கு ஈடாக யாரும் வர முடியாது என்பதால் குழந்தையின் அழுகை நின்றபாடில்லை. தற்போது, மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியோடு, குழந்தையைத் தவிக்கவிட்டுச் சென்ற அந்தத் தாய் மற்றும் அவரது உறவினர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in