LATEST NEWS
அடச்சீ..! கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த காதல் மனைவி.. போலீசுடன் ஓயோ ரூமுக்குள் நுழைந்த கணவன்… அங்கே பார்த்த அந்த சீன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட மனைவியே, கணவனுக்குத் தெரியாமல் ஓயோ விடுதியில் காதலனுடன் தனிமையில் இருந்தபோது கையும் களவுமாகச் சிக்கிய விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆகாஷ் என்ற இளைஞர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் அலிகாரில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்திருந்த ஆகாஷ், அங்குள்ள ஒரு சந்தைக்குச் சென்றபோது, எதிர்பாராதவிதமாகத் தனது மனைவியைக் கண்டார். ஆனால், அவர் தனியாக இல்லாமல் வேறொரு நபரான தனது கள்ளக்காதலனுடன் நெருக்கமாக உலா வந்துகொண்டிருந்ததை கண்டு ஆகாஷ் அதிர்ச்சியடைந்தார்.
சந்தேகமடைந்த ஆகாஷ் அவர்களைத் தொடரவே, அவரது மனைவி கள்ளக்காதலனுடன் அங்கிருந்த ஒரு ஓயோ விடுதிக்குள் நுழைந்துள்ளார். உடனடியாக ஆகாஷ் காவல்துறைக்குத் தகவல் கொடுத்து, போலீசாரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். பின்னர் போலீசாருடன் விடுதி அறைக்குள் திடீரென நுழைந்தபோது, அவரது மனைவி கள்ளக்காதலனுடன் ரொமான்டிக் மூடில் முத்தமிட்டபடி கையும் களவுமாகச் சிக்கினார். இதுகுறித்து ஆகாஷ் கூறும்போது, “எனக்கு என் மனைவி மீது நீண்ட நாட்களாகச் சந்தேகம் இருந்தது. ஆனால் நான் கேட்கும் போதெல்லாம், ‘பேபி, நான் உன்னை மட்டும்தான் காதலிக்கிறேன், வேறு யாருடனும் பேசுவதில்லை’ என்று கூறி என்னை ஏமாற்றி வந்துள்ளார்” எனத் தனது குமுறலைப் பதிவு செய்துள்ளார்.
