“அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது…” கத்ரினாவை பாடி ஷேமிங் செய்தவர்களை கிழித்து தொங்கவிட்ட குஷ்பு..!! – cinefeeds
Connect with us

CINEMA

“அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது…” கத்ரினாவை பாடி ஷேமிங் செய்தவர்களை கிழித்து தொங்கவிட்ட குஷ்பு..!!

Published

on

பாலிவுட் முன்னணி நடிகை கத்ரினா கைஃப், பிரசவத்திற்குப் பிறகு உடல் எடை கூடியதாகச் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களுக்கு, நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் மிகக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்து கொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பின், அவரது உடல் தோற்றத்தில் ஏற்பட்ட இயற்கையான மாற்றங்களை வைத்து, சமூக வலைத்தளங்களில் சிலர் அவரைப் ‘பாடி ஷேமிங்’ செய்து அநாகரிகமாக விமர்சித்து வந்தனர். இதற்குப் பல்வேறு திரைப்பிரபலங்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வரும் நிலையில், நடிகை குஷ்பு கத்ரினாவுக்கு ஆதரவாகத் தனது குரலை உயர்த்தியுள்ளார்.

Advertisement

பெண்களின் உடல் தோற்றம் மட்டுமே ஏன் எப்போதும் பொது விவாதப் பொருளாக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ள குஷ்பு, சமூகத்தின் இரட்டை நிலையைச் சாடியுள்ளார். “ஒரு ஆணுக்கு வழுக்கை விழுந்தால் அவர் ‘கௌரவமானவர்’ ஆகிறார். நரைமுடி வந்தால் ‘முதிர்ச்சியானவர், வசீகரமானவர்’ என்கிறார்கள். ஒரு ஆணின் இடுப்பு அளவு 40 அங்குலமாக மாறினால், அவரது தோற்றம் ஏன் இப்படி ஆனது என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால், ஒரு பெண்ணுக்கு வயதாகும் போது அல்லது உடலமைப்பில் மாற்றங்கள் ஏற்படும் போது மட்டும் விமர்சிக்கப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டு, “அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது” எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in