“பசிச்ச சிங்கத்துக்கு ஆட்டை வெச்ச மாதிரி..” வெஸ்ட் இண்டீஸ் கேப்டனை வறுத்தெடுத்த அஸ்வின்சஞ்சு சாம்சன் செய்த தரமான சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பசிச்ச சிங்கத்துக்கு ஆட்டை வெச்ச மாதிரி..” வெஸ்ட் இண்டீஸ் கேப்டனை வறுத்தெடுத்த அஸ்வின்சஞ்சு சாம்சன் செய்த தரமான சம்பவம்..!!

Published

on

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 249 ரன்கள் குவித்த போதிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 82 ரன்கள் விளாசி அசத்தினார். சாம்சனை வீழ்த்தும் உத்தியாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், பவர்-பிளேயில் சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹொசைனைத் தொடர்ந்து 3 ஓவர்கள் வீச வைத்தார். இதில் அகீல் ஹொசைனின் 3-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகளுடன் சாம்சன் ரன் மழை பொழிய, அகீல் முதல் 3 ஓவர்களில் 46 ரன்களை வாரி வழங்கினார்.

ஷாய் ஹோப்பின் இந்தத் தவறான உத்தியை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆரம்பத்தில் ரன் சேர்க்க சாம்சன் சற்று தடுமாறியபோது, அவர் மீது அழுத்தம் தருவதற்காக ஒரே முனையிலிருந்து தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியது மிகப்பெரிய தவறு என்று அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார். பவர்-பிளே நேரத்தில் அகீல் ஹொசைனைத் தொடர்ந்து மூன்று ஓவர்கள் வீசச் செய்தது, பசியோடு இருக்கும் சிங்கத்தின் தட்டில் ஆட்டை வைத்து நீட்டுவதற்குச் சமம் என்று அவர் ஒப்பிட்டுள்ளார். மேலும், அணியில் நீடிப்பதே கேள்விக்குறியாக இருக்கும் இக்கட்டான நிலையிலும், சாம்சன் சுயநலமின்றி அணிக்காகத் தொடர்ந்து ரிஸ்க் எடுத்து விளையாடும் அவரது சிறந்த மனப்பான்மையே அவருக்கு அதிர்ஷ்டத்தைத் தேடித்தருவதாகவும் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in