LATEST NEWS
“வந்த சண்டையை நாங்க விடவே மாட்டோம்..!” முதல்வர் விஜய்யை நேருக்கு நேர் எச்சரித்த அமைச்சர் சேகர்பாபு.. பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழகத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே அரசியல் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், முதல்வர் விஜய்யை முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மிகக் கடுமையான தொனியில் விமர்சித்துப் பேசியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வந்த சண்டையை நாங்கள் எப்போதும் விடுவதாக இல்லை. திமுகவை எதிர்க்க நினைப்பவர்கள் தங்கள் வரலாற்றை யோசித்துப் பார்க்க வேண்டும்” எனக் காட்டமாகக் குறிப்பிட்டார். முதலமைச்சர் விஜய் சமீபத்தில் கரூருக்குச் சென்று திமுகவைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததற்குப் பதிலடி தரும் வகையில் இந்த அதிரடி விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நெரிசல் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “அன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது பொறுப்புடன் களத்தில் நிற்காமல் ஓடியவர்கள் யார்?” எனக் கேள்வி எழுப்பினார். துயரச் சம்பவங்கள் நடக்கும் போது களத்தில் நின்று மக்களைப் பாதுகாப்பதே உண்மையான தலைவனுக்கு அழகு என்று சுட்டிக்காட்டிய அவர், அதை விட்டுவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் இன்று திமுகவை விமர்சிப்பது நகைச்சுவையாக உள்ளது எனத் தெரிவித்தார்.
