“டிபன் பாக்ஸுக்குள் ரூ.5,000..?!” விஜய் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு சிறப்பு பரிசு.. தாராபுரத்தில் எழுந்த புதிய சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டிபன் பாக்ஸுக்குள் ரூ.5,000..?!” விஜய் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு சிறப்பு பரிசு.. தாராபுரத்தில் எழுந்த புதிய சர்ச்சை..!!

Published

on

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரத்துடன் டிபன் பாக்ஸ் வழங்கியதாகக் கூறப்படுகிறது. தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து தாராபுரத்தில் முதல்வர் விஜய் பிரசாரம் செய்தார். இந்தக் கூட்டத்திற்கு வர உள்ளூர் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டாததால், அண்டை மாவட்டங்கள் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு தொண்டர்களைக் கவரும் வகையில் முதல்வர் விஜய், வேட்பாளர் சத்தியபாமா மற்றும் விசில் சின்னத்துடன் கூடிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட டிபன் பாக்ஸ்கள் பொதுக்கூட்டத்திற்கு வந்த தொண்டர்களுக்கு வழங்கப்பட்டன.

ஏற்கனவே தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இடைத்தேர்தல் தொகுதிகளில் தவெக சார்பாக வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகக் கூறி, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பத்துரை தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, முதியவர் ஒருவர் தவெகவினர் ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை வழங்குவதாகவும், ரூ.200 டோக்கன் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Advertisement

நாங்கள் தூய ஆட்சி நடத்தி வருகிறோம் எனக் கூறும் தவெகவினர், இப்போது பணம் தருவதுடன் பரிசுப் பொருட்களும் தருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தவெகவினர் வாக்காளர்களுக்கு அதிக பணம் கொடுக்கிறார்கள் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகமும் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in