LATEST NEWS
அய்யோ கடவுளே… மின்சாரம் தாக்கி சிதைந்த கைகள்… விளையாடச் சென்ற 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
சென்னை அரும்பாக்கம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஒருவன், தெருவோரத்தில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த சாலையோர மின்சாரப் பெட்டியை எதிர்பாராதவிதமாக தொட்ட போது மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் பாய்ந்த இந்த கொடூர விபத்தில், அந்த சிறுவனின் இரண்டு கைகளிலும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு கைகள் சிதைந்துள்ளன. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவனை உடனடியாக மீட்டு அவசர சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுவனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினரும், மின்சார வாரிய அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும், சாலையோர மின்சார பெட்டிகளின் பராமரிப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
