அய்யோ கொடுமையே.. கள்ளக்காதலை காட்டிக் கொடுத்ததால் ஆத்திரம்… 6 மாத கர்ப்பிணி கொடூரக் கொலை… பிரெட் சாப்பிட்டு இறந்ததாக நாடகமாடிய மாமியார், நாத்தனார்கள்.. விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை ..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ கொடுமையே.. கள்ளக்காதலை காட்டிக் கொடுத்ததால் ஆத்திரம்… 6 மாத கர்ப்பிணி கொடூரக் கொலை… பிரெட் சாப்பிட்டு இறந்ததாக நாடகமாடிய மாமியார், நாத்தனார்கள்.. விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை ..!!

Published

on

புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பாண்டித்துரை என்பவரின் மனைவி சந்தியா (21). 6 மாத கர்ப்பிணியான இவர், கடந்த 30-ந் தேதி காலை உணவாக பிரெட் சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டு மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாகக் கூறி, அவரது வீட்டார் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்த நிலையில், கணேஷ் நகர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அன்று மாலை நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் சந்தியா இயற்கை முறையில் இறக்கவில்லை என்றும், கொலை செய்யப்பட்டார் என்பதும் உறுதியானது. இதையடுத்து வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சந்தியாவின் நாத்தனார்கள் பாண்டி மீனா, பொற்கொடி, மாமியார் பானுமதி மற்றும் உறவினர்களான கனிமொழி, செல்வி, கார்த்தி ஆகிய 6 பேரும் சேர்ந்து சந்தியாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

நாத்தனார்களின் கள்ளக்காதல் விவகாரத்தைச் சந்தியா தன் கணவரிடம் கூறியதால், ஆத்திரமடைந்த அவர்கள் பாண்டித்துரை வெளியூர் சென்ற சமயம் பார்த்து சந்தியாவைத் துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை மறைக்கச் சந்தியாவின் வாயிலும் மூக்கிலும் பிரெட்டைத் திணித்தும், பாலை ஊற்றியும் நாடகமாடியது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களில் கார்த்தி புதுக்கோட்டை சிறையிலும், மற்ற 5 பெண்களும் திருச்சி பெண்கள் தனிச் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in