தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா..? ரெயிலில் இந்த பொருளை மறந்தும் கூட இத கொண்டு போயிராதீங்க.. … மீறினால் சிறை தண்டனை தான்..! தெற்கு ரெயில்வே அதிரடி எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா..? ரெயிலில் இந்த பொருளை மறந்தும் கூட இத கொண்டு போயிராதீங்க.. … மீறினால் சிறை தண்டனை தான்..! தெற்கு ரெயில்வே அதிரடி எச்சரிக்கை..!!

Published

on

ரெயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என தெற்கு ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, ரெயில் பயணிகளுக்கு தெற்கு ரெயில்வே முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரெயில்களிலும் ரெயில் நிலையங்களிலும் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி ரெயிலில் பட்டாசுகள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களைக் கொண்டு சென்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

அதன்படி, விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என தெற்கு ரெயில்வே எச்சரித்துள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in