“எங்கமா போனே நீ… என் பிள்ளை நிச்சயம் உயிருடன் வருவா…” தீபாவளி புத்தாடை வாங்கி வச்சு மகளுக்காக கண்ணீரோடு காத்திருக்கும் தாய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்கமா போனே நீ… என் பிள்ளை நிச்சயம் உயிருடன் வருவா…” தீபாவளி புத்தாடை வாங்கி வச்சு மகளுக்காக கண்ணீரோடு காத்திருக்கும் தாய்..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல் போய் 22 நாட்கள் ஆன தனது மகளுக்கு, தீபாவளிக்காக புத்தாடை வாங்கி வைத்துவிட்டு தாயார் பவானி கண்ணீருடன் காத்துக்கிடக்கும் சோகம் அப்பகுதி மக்களை நெகிழச் செய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா (எ) ஹேமாவதி, கடந்த மாதம் 12-ந்தேதி அதிகாலையில் வீட்டில் பெற்றோருடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது மாயமானார். அவர் காணாமல் போய் 22 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உள்ளூர் போலீசாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆலம்பூண்டியில் தற்காலிக முகாம் அமைத்து, அப்பகுதியில் பதிவான செல்போன் அழைப்பு விபரங்களை ஆய்வு செய்வதோடு, டிராக்டர் டிரைவர் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு பல நாட்கள் கடந்தும் சிறுமியைப் பற்றிய எந்தவொரு துப்பும் கிடைக்காதது அவளது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது. எங்கமா போனே நீ…
“என் பிள்ளை நிச்சயம் உயிருடன் வருவாள்” என்ற மாறாத நம்பிக்கையோடு தன் மகளுக்காக தீபாவளிப் புத்தாடையை வாங்கி வைத்துவிட்டு, படுக்கையறையில் மகளின் புகைப்படத்தைப் பார்த்தபடி தாயார் பவானி கண்ணீருடன் காத்துக்கிடப்பது பார்ப்பவர் நெஞ்சங்களை நெகிழச் செய்துள்ளது.காணாமல் போன சிறுமியை மீட்டு தாயின் மடியில் சேர்க்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவ்வழக்கில் மேலும் தீவிரமாகச் செயல்பட்டு மாயமான சிறுமியை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் தொடர் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in