உள்ளாடைகள் எங்கே..? 100 முறைக்கு மேல் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்த நபர்… சந்தேகத்தைக் கிளப்பிய USB சார்ஜர்… காதலை மறுத்ததால் காத்திருந்த பேரதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

உள்ளாடைகள் எங்கே..? 100 முறைக்கு மேல் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்த நபர்… சந்தேகத்தைக் கிளப்பிய USB சார்ஜர்… காதலை மறுத்ததால் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

Published

on

ஜப்பானில் ஆன்லைன் வீடியோ கேம் மூலம் அறிமுகமான பெண்ணின் காதல் நிராகரிப்பால் ஆத்திரமடைந்த 33 வயதான ஜுன் ஒகாடா என்பவர், அப்பெண்ணின் வீட்டிற்குள் 100 முறைக்கும் மேல் ரகசியமாக நுழைந்து அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023 ஜூலையில் அறிமுகமான இவர்கள் நேரில் சந்தித்துப் பழகிய நிலையில், ஒகாடாவின் காதலை அப்பெண் நிராகரித்துள்ளார். இதனால் அப்பெண்ணிற்குத் தெரியாமல் அவரது வீட்டுச் சாவியைத் திருடி மாற்றுச் சாவி தயாரித்த ஒகாடா, 2023 ஆகஸ்ட் முதல் 2024 அக்டோபர் வரையிலான 14 மாதங்களில் அப்பெண் வேலைக்குச் சென்ற நேரங்களில் சட்டவிரோதமாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

வீட்டிற்குள் நுழையும் ஒகாடா பல மணி நேரம் அங்கேயே தங்கி அப்பெண்ணின் உணவைச் சாப்பிடுவது, தனிப்பட்ட ஆவணங்களைப் பார்ப்பது மற்றும் படுக்கையறையில் பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபடுவது போன்ற அருவருப்பான செயல்களைச் செய்துள்ளார். மேலும், அப்பெண்ணின் உள்ளாடைகள் மற்றும் பழைய ஓட்டுநர் உரிமங்களைத் திருடிச் சென்றதோடு, வரவேற்பறையில் USB தொலைபேசி சார்ஜர் வடிவிலான ரகசிய கேமராவையும் பொருத்தியுள்ளார். அந்த கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்ப்பதற்காக, அதன் மெமரி கார்டுகளை மாற்றுவதற்காக மட்டுமே அவர் பலமுறை அந்த வீட்டிற்குச் சென்று வந்துள்ளார்.

Advertisement

இறுதியில், வீட்டில் இருந்த சந்தேகத்திற்கிடமான USB சார்ஜரை அப்பெண் சோதனை செய்தபோது, அதற்குள் ரகசிய கேமரா லென்ஸ் மற்றும் மெமரி கார்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தெரியாமல் வழக்கம்போல் மெமரி கார்டை மாற்றுவதற்காக அந்த வீட்டிற்கு வந்த ஒகாடாவை, ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டிருந்த காவல்துறையினர் கையும் களவுமாகக் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த டோக்கியோ மாவட்ட நீதிமன்றம், குற்றவாளி ஒகாடாவிற்கு 2 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்ததோடு, அதனை நான்கு ஆண்டுகள் நன்னடத்தைக் காலமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2.5 மில்லியன் யென் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஒகாடா அப்பெண்ணிடம் மன்னிப்பு கோரியுள்ளார். தனது வாழ்க்கையைப் பற்றிய அனைத்தையும் அவன் ரகசியமாகக் கண்காணித்தது தனக்கு மிகுந்த திகிலையும் அருவருப்பையும் ஏற்படுத்தியதாகப் பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in