“அட பாவமே! ஜாலியா லைவ் போனதுக்கு இப்படியா..? கேமராவில் தெரிந்த QR Code…11 லட்சத்துக்கு உணவை ஆர்டர் செய்து ஷாக் கொடுத்த நெட்டிசன்ஸ்..! . கதறிய இணைய பிரபலம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அட பாவமே! ஜாலியா லைவ் போனதுக்கு இப்படியா..? கேமராவில் தெரிந்த QR Code…11 லட்சத்துக்கு உணவை ஆர்டர் செய்து ஷாக் கொடுத்த நெட்டிசன்ஸ்..! . கதறிய இணைய பிரபலம்..!!

Published

on

அமெரிக்காவை சேர்ந்த இணையவழி பிரபலமான லேசி என்பவர், ‘ட்விட்ச்’ என்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையதளம் மூலம் தனது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்து வருகிறார். இவரது கணக்கை சுமார் 40 லட்சம் பயனர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் சமீபத்தில் ஜப்பானில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்று, உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் தான் உணவு சாப்பிடுவதை, ட்விட்ச் தளத்தில் லைவாக ஸ்ட்ரீமிங் செய்து பயனர்களுடன் உரையாடி வந்துள்ளார்.

இதையடுத்து அவரது மேஜையில் இருந்த கியூ.ஆர்.கோடு, போன் கேமராவில் பதிவாகி பயனர்களை சென்றடைந்தது. இதை கவனித்த பயனர்கள், அந்த கியூ.ஆர்.கோடு மூலம் சுமார் 11 லட்சம் மதிப்பிலான உணவுகளை ஆர்டர் செய்தனர். அப்போது இணைய பிரபலமான லேசி உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, வெய்ட்டர் ஒருவர் வந்து பில்லை கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து வந்த மற்ற வெய்ட்டர்களும் லேசியிடம் பல பில்களை காட்டியுள்ளனர். அப்போதுதான் லேசிக்கு, தான் செய்த தவறு தெரியவந்துள்ளது.

Advertisement

இதையடுத்து லேசி, இணையதளத்தில் தனது பயனர்களிடம் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என கோபமடைந்தார். அப்போது அவர், நீங்கள் செய்த குறும்புத்தனமான காரியத்தால் பெரும் மதிப்பிலான உணவுகள் வீணாகிவிட்டதாக பயனர்களிடம் கூறினார். இருப்பினும் அவர் இறுதியில் ஹோட்டல் உரிமையாளரிடம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுக்கான தொகையை தான் முழுவதுமாக வழங்குவதாக கூறினார். மேலும் ஹோட்டலுக்கு உணவு சாப்பிட வரும் ஏழ்மை குடும்பங்களுக்கு, ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளை வழங்குமாறும் ஹோட்டல் நிர்வாகத்திடம் அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in