உச்சக்கட்ட பரபரப்பு..! ஹாத்தி பர்வதம் அருகே மாயமான 6 பேர் சென்ற ஹெலிகாப்டர்… பதற்றத்தில் உத்தரகாண்ட்..! சம்பவ இடத்தில் சீறிப்பாயும் ராணுவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உச்சக்கட்ட பரபரப்பு..! ஹாத்தி பர்வதம் அருகே மாயமான 6 பேர் சென்ற ஹெலிகாப்டர்… பதற்றத்தில் உத்தரகாண்ட்..! சம்பவ இடத்தில் சீறிப்பாயும் ராணுவம்..!!

Published

on

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர், சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஹெலிகாப்டரில் ஒரு விமானி உட்பட மொத்தம் ஆறு பேர் பயணம் செய்துள்ளதாகவும், மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்லி எக்ஸ்-ரே நிறுவனத்தால் இயக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், ஹாத்தி பர்வதம் அருகே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போனதாகத் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதையடுத்து, நிவாரணம் மற்றும் தீவிர மீட்புப் பணிகளுக்காகக் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை வீரர்கள் அனைவரும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த விபத்து குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உறுதிப்படுத்தியுள்ளதோடு, நிலைமையை தான் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in