“எவரெஸ்ட் சிகரத்தில் நடந்த பயங்கரம்..” ஒரே நேரத்தில் தரையிறங்கிய 2 ஹெலிகாப்டர்கள்… நொடியில் மோதி நொறுங்கிய கொடூரம்..! அலற வைக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எவரெஸ்ட் சிகரத்தில் நடந்த பயங்கரம்..” ஒரே நேரத்தில் தரையிறங்கிய 2 ஹெலிகாப்டர்கள்… நொடியில் மோதி நொறுங்கிய கொடூரம்..! அலற வைக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரப் பகுதியில் இரு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முயன்றபோது, அவற்றின் இறக்கைகள் காற்றில் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில், இந்தியச் சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள சோலுகும்பே மாவட்டத்தின் பெரிச்சே என்ற இடத்தில் உள்ள ஹெலிபேடில், இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

‘ஃபிஷ்டெயில் ஏர்’ மற்றும் ‘ஏர் டைனாஸ்டி’ ஆகிய இரு தனியார் நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் பெரிச்சே ஹெலிபேடில் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்றுள்ளன. அப்போது, எதிர்பாராதவிதமாக இரு ஹெலிகாப்டர்களின் சுழல் இறக்கைகளும் ஒன்றுடன் ஒன்று பலமாக மோதிக்கொண்டன. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

ஃபிஷ்டெயில் ஏர் ஹெலிகாப்டரில் பயணித்த வசந்த குமார் என்ற இந்தியச் சுற்றுலாப் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக லுக்லா பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், நியூசிலாந்தைச் சேர்ந்த ஷைலேஷ் கிஷன் மற்றும் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டரின் மூத்த கேப்டன் ரவீந்திர பிரஜாபதி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தகவல் அதிகாரி ஞானேந்திர புல் மற்றும் உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in