LATEST NEWS
நேபாளத்தை புரட்டிப்போடும் பிரளயம்..! ஆற்று ஓட்டத்தையே தடுத்து நிறுத்திய கொடூரம்.. இணையத்தையே அதிரவைக்கும் வீடியோ..!!
நேபாளத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் அதிபயங்கரக் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதோடு, 14 பேர் மாயமாகியுள்ளனர். மனாங் மாவட்டத்தின் ஹிம்லுங் ஹிமால் அடிவார முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மேலும் இருவர் பலியாகியுள்ளனர், 10 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தின் லெய்டே பகுதியில் உள்ள ஒரு பிரம்மாண்ட மலைப்பகுதி, வெறும் 6 வினாடிகளில் சரிந்து காளி கண்டகி ஆற்றில் விழுந்து தற்கொலை போல ஆற்று ஓட்டத்தையே தடுத்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
சார் தாம் யாத்ரீகர்களால் எடுக்கப்பட்ட இந்த வீடியோக்களில், நிலச்சரிவின் போது வீடுகள் மற்றும் ராட்சத மரங்கள் பள்ளத்தாக்கிற்குள் அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்து மக்கள் அலறுவது பதிவாகியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்புதான் போதேகோஷி பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 1,410 பேர் உயிரிழந்ததோடு, 6,100 பேர் மாயமாகி இருக்கும் நிலையில், நேபாளம் தற்போது மீண்டும் ஒரு பெரிய இயற்கைப் பேரழிவைச் சந்தித்துள்ளது. மோசமான வானிலை நிலவுவதால் பல மலைப் பிரதேச மாவட்டங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் ராணுவத்திற்கும் மீட்புக் குழுவினருக்கும் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
