ஷாக்கிங்க் வீடியோ: சக்கரங்கள் இன்றி ஓடுதளத்தில் சறுக்கிய விமானம்.. பற்றி எரிந்த தீ.. பைலட் மயிரிழையில் உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஷாக்கிங்க் வீடியோ: சக்கரங்கள் இன்றி ஓடுதளத்தில் சறுக்கிய விமானம்.. பற்றி எரிந்த தீ.. பைலட் மயிரிழையில் உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்..!!

Published

on

கிரேக்க விமானப்படையின் எஃப்-16 (F-16) போர் விமானம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜாகிந்தோஸ் விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தின் சக்கரங்கள் இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், பைலட் லேண்டிங் கியரை இயக்காமலேயே ஓடுதளத்தில் விமானத்தின் அடிவகுதியை நேரடியாகத் தேய்த்தபடி தரையிறக்கினார். இதனால் ஏற்பட்ட உராய்வு காரணமாக விமானம் திடீரென தீப்பற்றி எரிந்த போதிலும், பைலட் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விமானப் போக்குவரத்துத் துறையில் “வீல்ஸ்-அப் லேண்டிங்” என்று அழைக்கப்படும் இந்த ‘பெல்லி லேண்டிங்’ என்பது ஒரு சவாலான அவசர கால உத்தியாகும். தொழில்நுட்பக் கோளாறுகளால் சக்கரங்கள் முழுமையாகக் கீழ்நோக்கி வராத சூழலில், பைலட்டுகள் விமானத்தின் அடிப்பகுதியை நேரடியாக ஓடுதளத்தில் முட்டச் செய்து தரையிறக்குவர். இந்த உராய்வினால் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க, தரையிறங்குவதற்கு முன்பாக விமானத்தில் இருக்கும் கூடுதல் எரிபொருளை நடுவானிலேயே பைலட்டுகள் கொட்டிவிடுவார்கள் அல்லது வானில் வட்டமடித்து அதை எரித்துத் தீர்த்துவிடுவார்கள்.

Advertisement

இத்தகைய அவசரத் தரையிறக்கத்தின் போது விமானத்தின் வேகத்தை மிகக் குறைவாக வைத்திருப்பதுடன், ஓடுதளத்தைச் சீராகத் தொடும் வரை விமானத்தைச் சமநிலையில் வைத்திருப்பது அவசியமாகும். சக்கரங்கள் இல்லாததால் விமானத்தின் கீழ் உள்ள உலோகப் பகுதி ஓடுதளத்தில் பலமாகத் தேய்க்கப்பட்டு, பயங்கரமான பொறிகளும் புகையும் கிளம்பும்; இதனால் விமானம் சிறிது தூரம் சறுக்கிக்கொண்டே சென்றுதான் நிற்கும். இந்தத் தரையிறக்கத்தால் விமானத்தின் எஞ்சின் மற்றும் பிற பாகங்கள் கடுமையாகச் சேதமடைந்தாலும், முறையாகச் செய்யப்படும் பட்சத்தில் பயணிகள் மற்றும் பைலட்டின் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in