LATEST NEWS
அடப்பாவிப் பயலே..! இன்ஸ்டாகிராமில் பகீர் ரீல்ஸ்.. மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து குடித்த வாலிபர்… அலறியடித்து தேடும் போலீசார்..!!
தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மண்டலத்தில், வாலிபர் ஒருவர் மதுபானத்துடன் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து குடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனது உயிரையே ஆபத்தில் ஹெட்டி விளையாடும் வகையில் அந்த வாலிபர் வெளியிட்ட இந்தத் தற்கொலை முயற்சி வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது.
இந்தக் கொடூரமான வீடியோ, பெத்தபள்ளி மண்டலத்திற்குட்பட்ட மாரேடுகொண்டா கிராமத்தின் வெளிப்பகுதியில் உள்ள விவசாயப் பயிர் நிலங்களில் வைத்து எடுக்கப்பட்டது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத விளைநிலப் பகுதியில் அமர்ந்து, அவர் இந்தத் துணிகரமான செயலை வீடியோவாகப் பதிவு செய்து பதிவேற்றியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வைரலானதை அடுத்து, உடனடியாக உஷாரான உள்ளூர் போலீசாரும், கிராம மக்களும் அதிர்ச்சியடைந்தனர். அந்த வாலிபரைக் காப்பாற்றும் நோக்கில், அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பதைத் தேடும் பணியில் போலீசாரும் பொதுமக்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
