LATEST NEWS
“காதைப்பிளக்கும் வெடிச்சத்தம்..” வெளியில் வந்து பார்த்த உரிமையாளருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. ரூ.1 லட்சம் ஸ்கூட்டருக்கு நேர்ந்த அவலம்.. நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டம் கோருட்லாவில் உள்ள சைராம்பூர் காலனியில், சார்ஜ் போட்டு சிறிது நேரத்திலேயே மின்சார இருசக்கர வாகனம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தின் உரிமையாளர் தனது இ-ஸ்கூட்டரை வழக்கம் போல் சார்ஜ் போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது திடீரென வெளியில் இருந்து கேட்ட காதைப்பிளக்கும் வெடிச் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்து ஓடிவந்து பார்த்துள்ளார். அங்கு ஸ்கூட்டர் தீப்பிடித்து எறிவதைக் கண்டு, உடனடியாகச் செயல்பட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்ததால் ஒரு பெரிய விபரீதம் மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், இந்த விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள அந்த மின்சார இருசக்கர வாகனம் முழுமையாக எரிந்து சாம்பலானது. சமீபகாலமாக ஆங்காங்கே மின்சார வாகனங்கள் பேட்டரி கோளாறு காரணமாக வெடித்து வரும் நிலையில், கோருட்லாவில் நடந்துள்ள இச்சம்பவம் இ-வாகனப் பயன்பாட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிவிபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
