ஸ்கூல் யூனிஃபார்மில் அதிரடி மாற்றம்..? சட்டைக்கு பதிலா டி-சர்ட்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்கூல் யூனிஃபார்மில் அதிரடி மாற்றம்..? சட்டைக்கு பதிலா டி-சர்ட்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

Published

on

பள்ளி மாணவர்களின் சீருடையில் சட்டைகளுக்குப் பதிலாக டி-சர்ட் வழங்குவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய அவர், பள்ளி மாணவர்கள் அணியும் சட்டைகளில் இருக்கும் பொத்தான்கள் (Buttons) அறுந்து விழுந்துவிட்டால், அதை மீண்டும் தைத்து அணிவதற்கு மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்; எனவே, இதற்கு மாற்றாக டி-சர்ட் சீருடையைக் கொண்டு வரலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த டி-சர்ட் சீருடை முறையைக் கொண்டு வருவதன் மூலம், மாணவர்கள் இதைப் பள்ளிகளுக்கு மட்டுமின்றி வீடுகளிலும் எளிதாக அணிந்துகொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி மற்றும் விளையாட்டு வகுப்புகளுக்காக பிரத்யேக ‘ஸ்போர்ட்ஸ் டி-சர்ட்’ மற்றும் ‘டிராக் பேண்ட்’ (Track Pants) வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொதுவான பள்ளிச் சீருடையையே டி-சர்ட்டாக மாற்றுவது குறித்த இந்த ஆலோசனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in