LATEST NEWS
“கைமீறிச் செல்லும் போதை கலாச்சாரம்..!” அரசுப் பேருந்தை மறித்து நடுரோட்டில் மிரட்டல்… தட்டிக் கேட்ட முதியவரை விரட்டியடித்த கொடூரச் செயல்.. போதையில் மிதந்த மாணவர்களின் திடுக்கிடும் வைரல் வீடியோ..!!
அரசுப் பேருந்து ஒன்றில் அரசுப் பள்ளி மாணவர்களுடன் சாதாரண பொதுமக்களும் பயணம் செய்துகொண்டிருந்தபோது, விடுப்பில் இருந்த சில மாணவர்கள் பேருந்துக்கு முன்பாகத் தங்களது மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் குறுக்காக நிறுத்திவிட்டு ஓட்டுநரை மிரட்டியதுடன், அமைதியாகச் செல்லும்படி வேண்டிக் கொண்ட முதியவரையும் தகாத வார்த்தைகளால் விரட்டியடித்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; சீருடையில் இருந்த ஒரு மாணவனும், பைக்கில் அமர்ந்திருந்த மற்ற மூவரும் ஏதோ ஒரு போதைப்பொருளின் தாக்கத்தில் இருப்பதுபோல் செயல்பட்ட அந்தப் பதினைந்து நிமிடக் காட்சிகள் அனைவரையும் உலுக்கி எடுத்துள்ளது.
இந்தப் பேருந்தில் அரசு பள்ளி மாணவ மாணவியர் மட்டுமல்ல, பொதுமக்கள் ஏராளமானோர் இருந்தனர். இந்த மாணவர்கள் எட்டாம் வகுப்பு / ஒன்பதாம் வகுப்பு தான் படிப்பார்கள் என்று நினைக்கிறேன். மாணவர்களுக்கு சப்போர்ட்டாக விடுமுறையில் இருந்த மூன்று மாணவர்கள் பைக்கை குறுக்கே நிறுத்தி டிரைவரை… pic.twitter.com/w9VB28uCG0— ஜெயராமன் திமுக (@jayaraman418) August 13, 2026
தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர்களைத் தாக்கும் துணிச்சல் சில மாணவர்களிடம் வளர்ந்துள்ள நிலையில், தற்போது பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பொதுமக்களையும் வெளிப்படையாக மிரட்டி அச்சுறுத்தும் அளவிற்கு நிலைமை கைமீறிச் சென்றுள்ளது; போதை கலாச்சாரம் இளம் தலைமுறையினரை எங்கு கொண்டு போய் நிறுத்தப் போகிறது என்ற அச்சத்தையும் கேள்வியையும் இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளதால், இதுபோன்ற வன்முறைச் செயல்களைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
