நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!.. மைதானத்தில் கால்பந்து வீரர் மீது ஏறிய ராட்சத ரோலர் வண்டி – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விசித்திர விபத்து..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!.. மைதானத்தில் கால்பந்து வீரர் மீது ஏறிய ராட்சத ரோலர் வண்டி – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விசித்திர விபத்து..!!

Published

on

தாய்லாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆண்ட்ரோஸ் டவுன்சென்ட் மைதானத்தை சமன்படுத்தும் கனரக ரோலர் வண்டியில் சிக்கி அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பிடி பிரச்சுவாப் மற்றும் பட்டாணி எஃப்சி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக வீரர்கள் வார்ம்-அப் செய்து கொண்டிருந்தபோது இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.

மைதானத்தில் காற்றில் வந்த பந்தை டவுன்சென்ட் எகிறி உதைக்க முயன்றபோது, அவருக்குப் பின்னால் வந்த பிட்ச் ரோலர் வண்டி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த டவுன்சென்ட் மீது அந்த ராட்சத வண்டியின் சக்கரம் ஏறியது போல் வீடியோவில் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், உடனடியாக வண்டியை ஒருபுறமாகச் சாய்த்து அவரை மீட்க உதவினார்.

Advertisement

வண்டியின் அடியில் சிக்கியதால் டவுன்சென்ட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கும் என அனைவரும் அஞ்சிய நிலையில், அவர் எந்தவொரு பெரிய காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக எழுந்து நடந்து சென்றார். மேலும், ஆச்சரியப்படும் விதமாக அதே போட்டியின் 93-வது நிமிடத்தில் அவர் மாற்று வீரராகக் களமிறங்கி விளையாடினார். சமூக ஊடகங்களில் தற்போது தீயாய் பரவி வரும் இந்த வீடியோ நெட்டிசன்களை உறைக்க வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in