LATEST NEWS
“வயிற்றைத் திறந்து பிரசவம் பார்க்கலாம்” இணையத்தை அதிர வைத்த ‘கர்ப்பிணி பொம்மை’ – வண்ட வண்டையாகத் திட்டும் நெட்டிசன்கள்..!!
அமெரிக்காவைச் சேர்ந்த ‘சுரு’ என்ற பொம்மை நிறுவனம் தயாரித்துள்ள ‘மை மினி பேபி மாம் அண்ட் பேபி சர்ப்ரைஸ்’ என்ற கர்ப்பிணி பொம்மை, இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொம்மையின் வயிற்றுப் பகுதியைத் திறந்து, உள்ளே இருக்கும் சிறிய குழந்தையை வெளியே எடுத்து, அதற்குப் பிரசவம் பார்ப்பது போல் குழந்தைகள் விளையாடும் வகையில் இது விசித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் இந்த பொம்மையின் ‘அன்பாக்சிங்’ வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, மக்கள் தங்களது மாறுபட்ட கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். பனிக்குடப் பைக்குள் இருக்கும் குழந்தையை வெளியே எடுத்து, அதற்கு ஆடை அணிவித்து, பொம்மையின் கைகளில் வைப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. குழந்தையை வெளியே எடுத்த பிறகு, பொம்மையின் வயிற்றை மீண்டும் மூடி இந்த விளையாட்டைத் தொடரலாம்.
இந்த பொம்மையின் வடிவமைப்பு குழந்தைகளுக்கு உகந்தது அல்ல என்றும், இது அவர்களின் சிந்தனையை எதிர்மறையாகப் பாதிக்கலாம் என்றும் பலர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதே வேளையில், “பிரசவம் பார்ப்பது இவ்வளவு எளிதாக இருந்தால் நன்றாக இருக்கும்” என்றும், “குழந்தையின் தந்தை பொம்மை தனியாக விற்கப்படுகிறதா?” என்றும் சிலர் நகைச்சுவையாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
