LATEST NEWS
திக் திக் நிமிடங்கள்..! அமைச்சர் வன்னி அரசு பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் வட்டமடித்ததால் பரபரப்பு..!!
விசிக துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான வன்னி அரசு பயணித்த இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக கோவை-திருப்பூர் வான்பரப்பில் நீண்ட நேரமாக தரையிறங்க முடியாமல் வட்டமடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வானிலை சாதகமாக இல்லாததால், பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானி தரையிறக்குவதை தாமதப்படுத்தி, வான்வெளி பாதையிலேயே விமானத்தைச் சுற்றி வரச் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எதிர்பாராத நிகழ்வு விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் வன்னி அரசுவின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது. மோசமான வானிலையிலும் விமானத்தை பாதுகாப்பாக இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விமானப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.
தற்போது வான்பரப்பில் நிலவும் சூழல் குறித்தும், விமானம் எப்போது, எங்கு பாதுகாப்பாகத் தரையிறக்கப்படும் என்பது குறித்தும் அடுத்தகட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
