LATEST NEWS
சுதந்திரத்திற்குப் பின் முதன்முறை… அமைச்சர் வன்னி அரசு சொந்த ஊருக்கு பேருந்து சேவை தொடக்கம்… சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த மக்கள்..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அயன்ரெட்டியப்பட்டி கிராமத்திற்கு, சுதந்திரத்திற்குப் பின் முதன்முறையாக இன்று புதிய அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவரும், தற்போதைய சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு, அயன்ரெட்டியப்பட்டியிலிருந்து விருதுநகர் வரை செல்லும் இந்த புதிய பேருந்து வழித்தட சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, தனது சொந்த ஊருக்குப் பேருந்து வசதி இல்லை என்ற நீண்டகாலக் குறையை முன்வைத்திருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியின்படி, போக்குவரத்துத் துறை அமைச்சரின் விரைவான நடவடிக்கையால் இந்த புதிய பேருந்து வசதி தற்போது தங்குதடையின்றி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தங்கள் ஊருக்கு 80 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அரசுப் பேருந்து வந்தடைந்ததால், கிராம மக்கள் அனைவரும் எல்லையற்ற மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தொடக்க விழாவின் நிறைவாக, அமைச்சர் வன்னி அரசு ஊர் பொதுமக்களுடன் இணைந்து பேருந்தில் ஏறி முதல் பயணத்தை மேற்கொண்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
