LATEST NEWS
“லண்டனில் CM யாரை சந்தித்தார்..? அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்…!” எல். முருகன் அதிரடி டிமாண்ட்..!!
லண்டனில் தமிழக முதல்வர் விஜய் கார் ரேஸை தொடங்கி வைத்திருப்பது, தமிழ்நாட்டில் மோட்டார் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தும் என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், முதல்வர் இந்த கார் ரேஸ் நிகழ்வைத் தொடங்கி வைத்ததை வரவேற்பதாகவும், நடிகர் அஜித்குமார் இதில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளையில், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் எதற்காக மேற்கொள்ளப்பட்டது மற்றும் அவர் அங்கு யாரையெல்லாம் சந்தித்தார் என்பது தொடர்பான விவரங்களை தமிழக அரசு மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
