LATEST NEWS
“உயிர் பயத்தை காட்டிய புயல்” 3 முறை முயன்றும் கடைசியில்.. அலறியடித்த பயணிகள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரிலிருந்து துனிசியா நோக்கி பயணித்த துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, கடந்த செப்டம்பர் 10-ம் தேதி மோசமான வானிலையில் சிக்கி தரை இறங்க முடியாமல் தத்தளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துனிசியாவின் கர்தேஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்க முயன்றபோது, அங்கு வீசிய பயங்கர புயல் காற்று விமானத்தை நிலைகுலையச் செய்துள்ளது.
விமானத்தை தரையிறக்க விமானிகள் 3 முறை முயன்ற போதும், புயல் காற்றின் வேகம் காரணமாக விமானம் கடுமையாக குலுங்கியதால் அவர்களால் தரையிறக்க முடியவில்லை. இதனால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் பெரும் பீதியடைந்து, தங்கள் இருக்கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அலறியடித்துள்ளனர். மூன்றாவது முயற்சியின் போது விமானம் திடீரென உயரத்தில் இருந்து கீழே விழுவது போல் உணர்ந்ததாகவும், தன் வாழ்நாளில் இப்படி ஒரு பயத்தை சந்தித்ததே இல்லை என்றும் அதில் பயணித்த மரினா மேஸ்காயா என்ற பயணி விவரித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DdJKu45s-ny/?utm_source=ig_web_button_share_sheet
மோசமான வானிலையை உணர்ந்த விமானிகள், உடனடியாக சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை 60 மைல் தெற்கே உள்ள என்பிதா ஹம்மாமத் விமான நிலையத்திற்கு திருப்பினர். அங்கு விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டதால், பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த திக் திக் சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. விமானத்திற்குள் பயணிகள் அலறிய பயங்கரமான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
