“என் வீட்டை விட்டு என்னையே துரத்திட்டாங்க” மனைவி வாங்கிய தடை உத்தரவு… 4-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற கணவன்… பதறவைக்கும் காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் வீட்டை விட்டு என்னையே துரத்திட்டாங்க” மனைவி வாங்கிய தடை உத்தரவு… 4-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற கணவன்… பதறவைக்கும் காட்சி..!!

Published

on

துருக்கியின் சாம்சூன் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, ஒரு நபர் தற்கொலைக்கு முயன்ற பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்வித்துறையில் அரசு ஊழியராகப் பணியாற்றி வரும் ஆர்.யு. என்ற அந்த நபர், விவாகரத்து நடைமுறைகள் மற்றும் தனக்கு எதிராக மனைவியால் பெறப்பட்ட வீட்டை விட்டு வெளியேறும் இடைக்காலத் தடை உத்தரவு காரணமாகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் நீதிமன்றத்தின் 4-வது மாடி நடைபாதையில் அவர் தற்கொலை செய்ய முயன்றபோது, அங்கிருந்த தனியார் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் ஜெகி தோசுன் மற்றும் போலீசார் சமயோசிதமாகச் செயல்பட்டு அவரைத் தடுத்துக் காப்பாற்றினர்.

https://x.com/siyahsancakx/status/2095953993268592704?s=20

Advertisement

தனது அவல நிலை குறித்துப் பேசிய அந்த நபர், “என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து சென்று 6 மாதங்கள் ஆகிவிட்டன; அவள் தற்போது அவளுடைய தாயார் வீட்டில்தான் வசித்து வருகிறாள். என்னோடு வாழாத, என்னுடன் தற்போதைய முகவரியில் இல்லாத அவளது புகாரின் பேரில், நான் சொந்தமாக வாடகை கொடுத்துக் குடியிருக்கும் வீட்டிலிருந்தே சட்டம் என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளது. சட்டத்தின் இந்தத் தவறான அணுகுமுறையால் அவள் என்னை வீதிக்குத் துரத்திவிட்டாள்; இப்போது நான் தங்குவதற்கு இடமின்றி நடுதெருவில் நிற்கிறேன்” என்று கண்ணீருடன் முறையிட்டுள்ளார்.

6284 என்ற துருக்கியச் சட்டம் ஆண்களைப் பெரிதும் பாதிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், தன் சொந்த வீட்டிலிருந்தே அநியாயமாகத் துரத்தப்பட்ட விரக்தியிலேயே இந்த தீவிர முடிவை எடுத்ததாகக் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென நடந்த இந்தத் தற்கொலை முயற்சி சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சிறிது நேரம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in