CRIME
முதல் மனைவியும் மர்ம மரணம்… 2வது மனைவியையும் அடித்துக் கொன்ற கணவன்… கல்யாணமான 4 மாதத்தில் பயங்கரம்.. பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பில்கானா கிராமத்தில், குஷ்பூ (25) என்ற இளம் பெண் அவரது கணவரான பைசுதீன் என்பவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே இந்தக் கொடூரக் கொலையை அவர் செய்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு மாதங்களுக்கு முன்புதான் இவர்களது திருமணம் நடந்துள்ளது.
மேலும், இது பைசுதீனுக்கு இரண்டாவது திருமணம் என்பது தெரியவந்துள்ளது. அவரது முதல் மனைவியும் இதேபோன்று கடந்த காலத்தில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்ததாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது கொலையாளி பைசுதீன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடிப் பிடிப்பதற்காகப் பகுதியின் காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
