“உன்ன போல கலப்பட ரத்தம் ஓடல”.. ஒரிஜனல் அதிமுக ரத்தம் இது.. நீயே இவ்ளோ ஆடும்போது நா எவ்ளோ ஆடுவேன்… ஆதவ் அர்ஜுனாவை கிழித்தெடுத்த எடப்பாடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உன்ன போல கலப்பட ரத்தம் ஓடல”.. ஒரிஜனல் அதிமுக ரத்தம் இது.. நீயே இவ்ளோ ஆடும்போது நா எவ்ளோ ஆடுவேன்… ஆதவ் அர்ஜுனாவை கிழித்தெடுத்த எடப்பாடி..!!

Published

on

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக் களத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி , தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவுக்கு மிகக் காரசாரமான முறையில் பதிலடி கொடுத்துப் பேசினார். அண்மைக்காலமாக அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் மற்றும் தனது மகன் மிதுன் குறித்து ஆதவ் அர்ஜுனா விமர்சித்து வந்த நிலையில், அதற்கு மேடையிலேயே இ.பி.எஸ் பகிரங்கமாகத் தனது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.

தனது உரையின் போது ஆதவ் அர்ஜுனாவைச் சாடிய எடப்பாடி பழனிசாமி, “உன்ன போல கலப்பட ரத்தம் ஓடல.. ஒரிஜனல் அதிமுக ரத்தம் இது..!” என்று மேடையில் மிக ஆக்ரோஷமாக முழங்கினார். மேலும், அதிமுகவை நோக்கி ‘நாங்க மற்றும் பலரா..?’ என்று எள்ளிநகையாடிய விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தவெக போன்ற புதிய கட்சிகள் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பொன்விழா கண்ட பேரியக்கம் அதிமுக என்பதைச் சுட்டிக்காட்டினார்.

Advertisement

தொடர்ந்து தவெக-வின் செயல்பாடுகளை விமர்சித்த இ.பி.எஸ், “நீங்களே இந்த ஒரு சில ஆண்டுகளிலேயே இவ்ளோ ஆட்டம் ஆடும்போது, அரை நூற்றாண்டு கால பாரம்பரியமிக்க பொன்விழா கண்ட அரசியல் கட்சியான நாங்க எந்த அளவுக்கு ஆட்டம் போடுவோம்!” என்று அரசியல் ரீதியாகக் கடுமையாக எச்சரித்தார். மதுராந்தகம் தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளின் சவால்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அதிமுகவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in