BREAKING: முடிவுக்கு வந்த ஒரு சகாப்தம்..! மெக்சிகோ போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் ‘காட் பாதர்’ மரணம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: முடிவுக்கு வந்த ஒரு சகாப்தம்..! மெக்சிகோ போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் ‘காட் பாதர்’ மரணம்..!!

Published

on

மெக்சிகோவின் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் ‘காட் பாதர்’ என்று அழைக்கப்பட்ட மிகுவல் ஏஞ்சல் பெலிக்ஸ் கல்லார்டோ (80), உடல்நலக் குறைவால் காலமானார். சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவர், உறுப்பு செயலிழப்பு காரணமாக குவாடலஹாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாதாரண காவல்துறை அதிகாரியாக இருந்து, 1980-களில் கொலம்பிய போதைப்பொருள் குழுக்களுடன் இணைந்து அமெரிக்காவிற்கான கோகோயின் கடத்தலை இவர் கட்டுப்படுத்தினார். 1985-ல் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு முகவர் என்ரிக்கை கமரேனா கொல்லப்பட்ட வழக்கில், 1989-ல் கைது செய்யப்பட்டு நீண்ட கால சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in