திமுகவிற்கு அதிர்ச்சி..! இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திமுகவிற்கு அதிர்ச்சி..! இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி…!!

Published

on

தஞ்சாவூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான வி. பண்டரிநாதன், திமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அவர் இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, தன்னை அதிகாரப்பூர்வமாகக் கட்சியில் இணைத்துக் கொண்டார். அதிமுகவில் இருந்து விலகி சில காலம் திமுகவில் பயணித்து வந்த அவர், தற்போது தாய் கழகத்திற்கே மீண்டும் திரும்பியுள்ளார்.

இந்த இணைப்பு நிகழ்வின் போது, அதிமுகவின் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்ற பண்டரிநாதனை, கட்சியின் பொதுச் செயலாளர் மலர்க்கொத்து கொடுத்து அதிமுகவிற்கு அன்போடு வரவேற்றார். இந்த திடீர் அரசியல் மாற்றம் தஞ்சை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in