LATEST NEWS
“அடிப்பாவி… பெற்ற தாயா இல்லை அரக்கியா..?” பிரசாதத்தை எச்சில்படுத்தியதால் ஆத்திரம்… 4 வயது மகளை அடித்துக்கொன்ற தாய்.. உறைய வைக்கும் சம்பவம்..!!
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பூசா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகமதுபூர் பிரௌலி கிராமத்தில், சத் பூஜை பிரசாதத்தை எச்சில்படுத்தியதாகக் கூறி, தாய் ஒருவர் தனது நான்கு வயது மகள் சுஹானி குமாரியைக் கொடூரமாகத் தாக்கியதில் குழந்தை உயிரிழந்தது.
சத் பண்டிகையையொட்டி வீட்டில் ‘கர்னா’ சடங்குக்கான பாயசம் மற்றும் பிரசாதம் தயாரிக்கப்பட்டு பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது. மறுநாள் அஸ்தமிக்கும் சூரியனுக்கு அர்க்கியம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, சிறுமி பிரசாதத்தை எச்சில்படுத்திவிட்டதாகக் கூறி ஆத்திரமடைந்த தாய் ரீனா குமாரி குழந்தையைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமியை குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
மகளை இழந்த தந்தையின் கதறலால் பண்டிகை மகிழ்ச்சி நிறைந்திருந்த அந்த வீட்டில் பெரும் சோகமும், கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்துத் தகவல் அறிந்த பூசா காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட தாய் ரீனா குமாரியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதோடு, கிராமத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
