CRIME
இது என்ன கொடுமை…. 4 மாதங்களாக முதலிரவைத் தள்ளிப்போட்ட மனைவி.. கேள்வி கேட்ட புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூர முடிவு.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், திருமணமாகி நான்கு மாதங்களாகியும் முதலிரவு தள்ளிப்போன விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபய் என்ற இளைஞருக்குக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான நாள் முதலே அவரது மனைவி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி முதலிரவைத் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
இந்தத் தகராறின் போது, மணப்பெண்ணின் மைத்துனர் அபய்யைக் கொடூரமாகத் தாக்கியதாகவும், இதில் படுகாயமடைந்த அபய் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த அபய்யின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதிலும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறிச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, இச்சம்பவத்திற்குப் பிறகு அபய்யின் மனைவியும் அப்பகுதியிலிருந்து வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அன்று உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
