கலங்க வைக்கும் நிஜச் சம்பவம்.. கோதுமை வயலில் கேட்ட மெல்லிய அழுகுரல்… மண்ணைத் தோண்டிப் பார்த்த விவசாயி தம்பதிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

கலங்க வைக்கும் நிஜச் சம்பவம்.. கோதுமை வயலில் கேட்ட மெல்லிய அழுகுரல்… மண்ணைத் தோண்டிப் பார்த்த விவசாயி தம்பதிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள நக்லா பஞ்சாரா கிராமத்தில், பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தை மண்ணுக்குள் பாதியளவு புதைக்கப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை காலை 53 வயதான ஜிதேந்திர சிங் மற்றும் அவரது மனைவி ரீனா தேவி (50) ஆகிய விவசாயத் தம்பதியினர் கோதுமை சாகுபடிக்காகத் தங்களது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, குழந்தையின் மெல்லிய அழுகுரல் கேட்டுள்ளது. சத்தம் வந்த திசையில் சென்று பார்த்தபோது, வாயிலும் உடலிலும் மண் படிந்த நிலையில் பாதியளவு புதைக்கப்பட்டிருந்த பச்சிளம் பெண் குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாகக் குழந்தையை மீட்டு அலிகஞ்ச் அரசு சமூக சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) கண்காணிக்கப்பட்ட அந்தக் குழந்தை, தற்போது பாதுகாப்பாகக் குழந்தைகள் உதவி மையப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஏற்கனவே ஆறு மகன்களைக் கொண்ட ஜிதேந்திர சிங் மற்றும் ரீனா தேவி தம்பதியினர், தங்களுக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்ததால், மீட்கப்பட்ட இந்தக் குழந்தையைத் தங்களது சொந்த மகளாகவே வளர்க்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். குழந்தையின் எதிர்காலம் மற்றும் வளர்ப்புக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருப்பதாக அவர்கள் கூறியபோதிலும், சட்டப்பூர்வ தத்தெடுப்பு நடைமுறைகள் உள்ளதால் உடனடியாகக் குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அரசு தத்தெடுப்பு மையத்தில் பாதுகாப்பாக உள்ள அந்தக் குழந்தை, மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பிறகே அதன் எதிர்காலம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in