“அப்பா என்னை விட்டுப் போகாதீங்க…” – சுரங்க விபத்தில் பலியான தந்தையின் சவப்பெட்டியைப் பிடித்துக் கதறிய 13 வயது மகன்.. நெஞ்சை உருக்கும் சோகம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்பா என்னை விட்டுப் போகாதீங்க…” – சுரங்க விபத்தில் பலியான தந்தையின் சவப்பெட்டியைப் பிடித்துக் கதறிய 13 வயது மகன்.. நெஞ்சை உருக்கும் சோகம்..!

Published

on

துருக்கியின் மனிசா மாகாணம், சோமா மாவட்டத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் சரிவில் சிக்கி 37 வயதான கெரிம் ஓரென் (Kerim Ören) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார் . அவரது உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, கண்ணீர் மல்க அவருக்கு இறுதி விடை கொடுக்கப்பட்டது

இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான கெரிம் ஓரெனின் இறுதிச் சடங்கின் போது, நெஞ்சை உலுக்கும் ஒரு சோகக் காட்சி அரங்கேறியது. அவருடைய 13 வயது மூத்த மகன் யாசர் , தனது தந்தையின் சவப்பெட்டியை விட்டு நகர மறுத்து, அழுதுகொண்டே அங்கேயே நின்றிருந்த காட்சி பார்ப்போரின் இதயங்களை உடைப்பதாக இருந்தது .

Advertisement

சுரங்க விபத்தில் உயிரிழந்த கெரிமின் உடல், உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, அங்குள்ள மசூதியில் இறுதி தொழுகை நடத்தப்பட்டு மாலையில் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது . அவரது மகனின் ஆராதத் துயரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in