“பகீர்.. மழைநீரில் கால் வைத்த அந்த ஒரு நொடி.. அடுத்தடுத்து சுருண்டு விழுந்த இரு உயிர்..” நீதிமன்றத்தில் வெளியான அதிரடி ட்விஸ்ட்.. நடுங்க வைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பகீர்.. மழைநீரில் கால் வைத்த அந்த ஒரு நொடி.. அடுத்தடுத்து சுருண்டு விழுந்த இரு உயிர்..” நீதிமன்றத்தில் வெளியான அதிரடி ட்விஸ்ட்.. நடுங்க வைக்கும் வீடியோ..!!

Published

on

துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில், கனமழையின் போது தெருவில் தேங்கியிருந்த மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த வழக்கில், கூடுதல் நிபுணர் அறிக்கை பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024 ஜூலை மாதத்தில், லெவண்ட் பகுதியில் உள்ள தெரு ஒன்றைக் கடக்க முயன்ற ஓஸ்கு செரென் டெனிஸ் (23) என்ற மருத்துவ மாணவியும், அவரைக் காப்பாற்ற முயன்ற இனான்ஸ் ஒக்டேமே (44) என்ற நபரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு மற்றும் அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, இந்த விபத்து குறித்த மேலும் ஒரு விரிவான தொழில்நுட்ப அறிக்கையைப் பெற மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட முந்தைய அறிக்கைகளில், மின்சார நிறுவனத்தின் கேபிள்கள் போதிய ஆழத்தில் புதைக்கப்படாததே இந்த விபத்திற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் 30 பேருக்கு 4 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ள புதிய கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே அடுத்தகட்ட இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்பதால், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரவிருக்கும் நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in