“ஏன் பிரதர் குப்பைய போட்டீங்க..?” காற்றில் பறந்து வந்த ‘அந்த’ குரல்! நடுரோட்டில் திகைத்து நின்ற நபர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. நெட்டிசன்களைக் கவர்ந்த வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஏன் பிரதர் குப்பைய போட்டீங்க..?” காற்றில் பறந்து வந்த ‘அந்த’ குரல்! நடுரோட்டில் திகைத்து நின்ற நபர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. நெட்டிசன்களைக் கவர்ந்த வைரல் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் செக்டார் பீட்டா-1 பகுதியில், பொதுமக்களின் அஜாக்கிரதையான குப்பை கொட்டும் பழக்கத்தை டிஜிட்டல் முறையில் தடுத்து நிறுத்தும் சுவாரசியமான தொழில்நுட்ப முறை ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையில் யாராவது குப்பைகளைத் தூக்கி எறிந்தால், அங்கு பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அவர்களைக் கச்சிதமாகப் படம் பிடித்து விடுகின்றன. அடுத்த சில நொடிகளிலேயே, அங்கிருக்கும் ஒலிபெருக்கி மூலமாக, “சகோதரா, ஏன் சாலையில் குப்பையை வீசினாய்?” என்று பொது வெளியில் உரத்த குரலில் அறிவிப்பு ஒலிக்கிறது. எதிர்பாராத இந்த அறிவிப்பைக் கேட்டு, குப்பையை வீசிய நபர் யார் நம்மைப் பார்க்கிறார்கள் என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்து அங்குமிங்கும் திகைப்புடன் தேடுகிறார்.

அவர் தேடிக்கொண்டிருக்கும் போதே ஒலிபெருக்கியில் இருந்து மீண்டும், “அந்தக் குப்பையை முதலில் எடுங்கள் சகோதரா” என்று அதிரடி உத்தரவு வருகிறது. இதனால் வேறு வழியின்றி, அந்த நபர் தான் வீசிய குப்பையைத் தானே மீண்டும் குனிந்து எடுத்து, தனது வீட்டிற்கோ அல்லது அதற்கான சரியான குப்பைத் தொட்டியிலோ கொண்டு போய் போடுகிறார். சாலையில் குப்பை கொட்டுபவர்களைப் பொது வெளியில் அவமானப்படுத்தி, அவர்களைக் கொண்டே தூய்மை செய்ய வைக்கும் இந்த நூதனமான மற்றும் புத்திசாலித்தனமான யோசனை, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தூய்மைப் பணியில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in